கடவூரில் சமூக தணிக்கை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கடவூரில் சமூக தணிக்கை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கடவூரில் சமூக தணிக்கை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, கடவூர் ஊராட்சியில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கிராம சேவை மைய கட்டிடத்தில், கடவூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து தலைமையில் சமூக தணிக்கை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நடைபெற்றது இந்த கூட்டத்தில் வள அலுவலர் இந்துமதி, 3-வது வார்டு உறுப்பினர் மேகலா, பணித்தள பொறுப்பாளர்கள், 100 நாள் வேலை உறுதி திட்ட பயனாளிகள், பாலவிடுதி ஊராட்சி மன்ற செயலாளர் ஸ்ரீரங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் செய்த வேலை குறித்தும், வேலையில் பங்கேற்ற பயனாளிகள் குறித்தும், செய்த வேலைக்கான ஊதியம் பெற்றது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், இது தொடர்பாக செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள சிறப்பு ஊராட்சி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.