தீயணைப்பு துறை சார்பில் போலி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது
இணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்
பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை போலி ஒத்திகை பயிற்சி மற்றும் செயல் விளக்கம் ஆலத்தூர் வட்டத்தில் உள்ள கொட்டரை, சிறுகண்பூர் தெற்கு மாதவி( ஐயன்புரம்), சாத்தனூர். ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டது ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமை தாங்கினார். இதில் நீர் நிலைகளில் சிக்கிக் கொண்டவர்களை தீயணைப்புத்துறை படகு மூலமும் சிறப்பு தளவாடங்கள் மூலமும் எவ்வாறு உயிருடன் மீட்பது போன்ற பயிற்சியையும் பருவ மழை காலங்களில் இடி மழை மின்னல்களில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி செய்து காண்பிக்கப்பட்டது நிகழ்ச்சியில் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பாளர் இன்ப ராசன், தீயணைப்பாளர்கள் , சரண்சிங், ஸ்ரீதர் ,பிரவீன் மணிமாறன், விஸ்வநாத் பிரதாப் சிங், உள்ளிட்டோர் கலந்துகொண்டு செயல் விளக்கங்களை செய்து காண்பித்தனர்