விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவேற்றம் செய்யக்கூடாது

பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினர் அறிவிப்பு

Update: 2024-09-04 00:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விமர்சனத்திற்குரிய புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் இடம்பெறும் விளம்பர சுவரொட்டிகள் மற்றும் விளம்பர தட்டிகள் போன்றவைகள் வைக்கப்படுதல் கூடாது. மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவேற்றம் செய்யக்கூடாது. மத வழிபாட்டு இடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களின் அருகில் விளம்பர பதாகைகள் நிறுவப்படுதல் தவிர்க்க வேண்டும். இசை இசைக்கப்படும் போது அதிக ஒலி எழுப்புதல் கூடாது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது சமுதாயத் தலைவர்களை ஆதரிக்கும் பேனர்கள் வைக்கக்கூடாது. சமுதாய விரோத மனநிலையில் குறிப்பிடும் வாசகங்களை முழங்குதல் மற்றும் பிற மதங்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல்கள் எவ்விதத்திலும் செய்யக்கூடாது. மீறி குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறையின் சார்பாக தெரிவிக்கப்படுகின்றது.

Similar News