பேருந்தில் தகாத வார்த்தையில் பேசிய போதை ஆசாமி

வேடசந்தூர் ஆத்துமேட்டில் குடிபோதையில் செல்போனை தொலைத்து விட்டு பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் ஓட்டுநர் நடத்துனரை தகாத வார்த்தையில் பேசிய போதை ஆசாமி

Update: 2024-09-04 05:09 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு ஜங்ஷன் பகுதியில் அரசு பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்த நிலையில் பரபரப்பாய் காணப்பட்டது. அருகில் சென்று விசாரித்த போது மதுரையில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்போது அந்தப் பேருந்தில் நாமக்கல்லைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் அதிக போதையில் பேருந்தில் ஏறியதாக கூறப்படுகிறது. தனது செல்போன் காணாமல் போனதால் பேருந்தில் இருந்தவர்களை தகாத வார்த்தையில் பேசி யார்ரா என் செல்போனை எடுத்தது டிரைவரா கண்டக்டரா எடுத்தது யார் என தகாத வார்த்தையில் கூறி தகராறில் ஈடுபட்டதால் ஓட்டுநர் பேருந்தை வேடசந்தூரில் நிறுத்தியுள்ளார். ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அந்த மது போதை ஆசாமி மற்றும் ஓட்டுநர் நடத்துனரிடம் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அந்த மது போதை ஆசாமியிடம் போலீசார் முன்பு டிக்கெட் கட்டணத்தை திரும்ப கொடுத்து விட்டு பேருந்தை எடுத்துச் சென்றனர். வேடசந்தூர் போலீசார் மொபைல் தொலைந்த இடத்தில் சென்று முறையாக காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள் தேவையில்லாமல் பொதுமக்களிடையே பிரச்சனை செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பினர். குடிபோதையில் செல்போனை தொலைத்து விட்டு பேருந்தின் பயணிகளிடம் தகாத வார்த்தை பேசிய போதை ஆசமியால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News