நாமக்கல் மாவட்ட தடகள சங்கம் கே எஸ் ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் நடத்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மூன்றாவது நாமக்கல் மாவட்ட இளையோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று தொடங்கி நாளை வரை நடக்க உள்ளது. கே எஸ் ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள தடகள மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றது துவக்க விழா நிகழ்ச்சிக்கு கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நாமக்கல் மாவட்ட தடகள சங்கத் துணைத் தலைவர் ஆர் சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் வி எஸ் மாதேஸ்வரன், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஆர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாமக்கல் மாவட்ட தடகள சங்க தலைவர் ஏகேபி சின்ராஜ் வரவேற்றார். விளையாட்டு போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் தொடங்கி வைத்தார் விளையாட்டு போட்டிகளுக்கான ஜோதியை பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் ஏற்றி வைத்தார். முதல் கட்டமாக நடந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற இருபது வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பழக்கங்கள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் தடகள சங்கத்தின் துணைச் தலைவர்கள் பி ஆர் டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பி ஆர் டி பரந்தாமன்,எக்ஸெல் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் மதன் கார்த்திக் நடேசன்,அசோக் குமார் சஷ்டி குமார் மற்றும்கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களின் அட்மின் இயக்குனர் மோகன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் ராயல் செந்தில், சேன்யோ குமார்,வெற்றி செந்தில்ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.