ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு சார்பில் எம்பி துரை வைகோ சந்தித்து மனு..
ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு சார்பில் எம்பி துரை வைகோ சந்தித்து மனு..
மதிமுக தலைமை நிலையம் தாயகத்திற்கு, மறுமலர்ச்சி திமுக நாமக்கல் மாவட்ட அவைத்தலைவர் நா.ஜோதிபாசு அவர்கள் முன்னிலையில், ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு சார்பில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் துரை வைகோ எம்.பி முதன்மைச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக அவர்களை சந்தித்தனர். அப்போது, ராசிபுரம் நகர மையப்பகுதியில் இயங்கி வந்த பேருந்து நிலையத்தை சுமார் எட்டரை கிலோமீட்டர் தள்ளி, ராசிபுரம் நகரத்திற்கு தொடர்பே இல்லாத அணைப்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் மாற்றுவதை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். அதற்குண்டான தகவல்களை, ஆவணங்களை வழங்கினார்கள். இந்த சந்திப்பில், இராசிபுரம் M.பாலசுப்ரமணியன், நகர கழக செயலாளர், முன்னாள் நகர்மன்ற தலைவர், அஇஅதிமுக, V.சேதுராமன், மாவட்ட பொதுச்செயலாளர், பாரதீய ஜனதா கட்சி, S.மணிமாறன், நகரசெயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பூக்கடை கி. மாது, நாமக்கல் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர், பாமக, கே. கந்தசாமி நாமக்கல் கிழக்கு மாவட்ட வன்னியர் சங்க துணைச் செயலாளர், லோ.நந்தகுமார், நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர், நாம் தமிழர் கட்சி, A.மாதேஸ்வரன், தலைவர்.உள்ளாட்சி கடை வியாபாரிகள் பொதுநல சங்கம் ராசிபுரம், Y. நாசர், நகரச் செயலாளர், எஸ்.டி.பி.ஐ கட்சி ஆகிய கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். மேலும், ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு J.J.செந்தில் குமார், மாவட்ட தலைவர் தமிழக வெற்றிக்கழகம், S.கந்தசாமி, மாவட்டச்செயலாளர், சிபிஎம், மும்பை அர்ஜுன், மாவட்டச்செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, அ.இளையராஜா, நகரச்செயலாளர், தேமுதிக, பிடல் சேகுவேரா நகரசெயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் ஆகியோரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர். அவர்களிடம் மனுக்கள் பெற்று இது குறித்து துரை வைகோ எம்.பி முதன்மைச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக அவர்கள் பேசினார்..