தாய் மகன் காவல் நிலையம் முன்பு தர்ணா

இடப்பிரச்சனை சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

Update: 2024-09-04 18:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பூவராகவன் நகரை சேர்ந்தவர் துரை மகன் ரமேஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் ராஜசேகர் என்பவருக்கும் இடப்பிரச்சனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வருகிறது. மேலும் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஜசேகர் தொடர்ந்து ரமேஷ் மற்றும் அவரது தாயார் விஜயலட்சுமியை இடம் அடிக்கடி பிரச்சனை செய்து வருவதாக ரமேஷ் மீண்டும் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட விருத்தாசலம் காவல்துறையினர் சிவில் சம்பந்தப்பட்ட வழக்கு அதுவும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் விசாரணை செய்துதான் நடவடிக்கை எடுக்க முடியும் என கூறி வந்துள்ளனர். இது சம்பந்தமாக இன்று மீண்டும் காவல் நிலையத்திற்கு அவர்கள் சென்றபோது போலீசார் இந்த தகவலை மீண்டும் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் மற்றும் அவரது தாய் விஜயலட்சுமி ஆகிய இருவரும் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து சமாதானம் செய்து அனுப்பினர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News