மர சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி

கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் மற்றும் விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நடந்தது

Update: 2024-09-04 18:02 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் மற்றும் விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் மர சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் வரவேற்றார். வனமரபியல் நிலைய அதிகாரி மாதவராஜ் கலந்துகொண்டு வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் அம்சங்கள், பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார். இதில் பேராசிரியர்கள் சுகுமாறன், மோதிலால், கண்ணன், காயத்ரி ஆகியோர் மரம் நடுதலின் அவசியம் குறித்து பேசினார்கள். வன மரபியல் நிலையத்தின் முதுநிலை விஞ்ஞானி ஞானவேல் கலந்துகொண்டு சவுக்கு மரம், தேக்கு மரம், புளிய மரம், செஞ்சந்தனம் மற்றும் மகோகனி மரம் வளர்ப்பு, மரங்களின் வகைகள், வளர்ப்பு முறைகள், தரமான நாற்றுகள் தேர்வு செய்தல், உரமிடுதல், நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடு, பயன்கள் மற்றும் சந்தைப் படுத்துதல் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

Similar News