கரூரில், அருள்மிகு ஸ்ரீ ஜெய சக்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கரூரில், அருள்மிகு ஸ்ரீ ஜெய சக்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கரூரில், அருள்மிகு ஸ்ரீ ஜெய சக்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் எல் என் எஸ் பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஜெய சக்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் யாகம் வளர்த்து, அதில் இரண்டாம்கால யாக பூஜை, மூல மந்திர,மாலமந்திர, ஹோம மந்திரம், திரவியாகுதி, நாடி சந்தானம், ஸ்பர்சாகுதி உள்ளிட்ட யாக பூஜைகள் நடத்தி முடித்து, மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஊர் நாட்டாமைகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ ஜெயசக்தி விநாயகரை வணங்கி அருளை பெற்று சென்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கும்பாபிஷேக விழா கமிட்டியின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.