மல்லூர் வீ.ஜி விகாஸ் பப்ளிக் பள்ளியில் ஆசிரியர் தினவிழா
மல்லூர் வீ.ஜி விகாஸ் பப்ளிக் பள்ளியில் ஆசிரியர் தினவிழா
மல்லூர் வீ.ஜி விகாஸ் பப்ளிக் பள்ளியில் வியாழக்கிழமை ஆசிரியர் தினவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளால் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆசிரியர்களின் மகத்தான பணிகள் குறித்து மாணவர்கள் உரையாற்றினர். நடனம்,கவிதை வாசித்தல் மற்றும் ஆசிரியர்களுக்குப் பல போட்டிகள் நடத்தி மகிழ்வித்தனர். பள்ளி முதன்மைச் செயல் அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் நிர்வாக அலுவலர் வினோத்குமார் ஆகியோர் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.பள்ளி முதல்வர் கணேஷ் ஆசிரியர் தின வாழ்த்து கூறி நிகழ்ச்சிகளை நிறைவு செய்தார்.