ஆசிரியர் தினத்தன்று பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த போராட்டம்

மயிலாடுதுறையில் ஆசிரியர் தினமான இன்று பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Update: 2024-09-05 18:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
:- தமிழக முழுவதும் என்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. நிலையில் ஆசிரியர் தினமான இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டபா அங்காடி முன்பு புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்தவேண்டும், சிபிஎஸ்ஐ ஒழிக்க வேண்டும், தேர்தல் போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் அருள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், முன்னாள் மாநில செயலாளர் லீலாவதி, நடராஜன் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Similar News