விநாயகர் சிலைகள் ஊர்வலம்:பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி ஆய்வு!
காயல்பட்டினத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்லும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்லும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்தார். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று காயல்பட்டினம் பகுதிக்கு சென்று அங்கு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் வழித்தட பாதைகளை பார்வையிட்டு அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார். மேலும் திருச்செந்தூர் கடற்கரை பகுதிக்கு சென்று விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பகுதியையும் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்