அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்காக காத்துக் கிடக்கும் விவசாயிகள்...
அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்காக விழி மேல் விழி வைத்து காத்துக் கிடக்கும் விவசாயிகள்...
அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்காக விழி மேல் விழி வைத்து காத்துக் கிடக்கும் விவசாயிகள்... மதுராந்தகம் அருகே வெள்ளை புத்தூர் கிராம மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா ஆவலுடன் காத்திருக்கும் விவசாயிகள்... செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ள புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 5,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இங்கு பெரும்பாலானோர் விவசாயம் செய்து தங்களது வாழ்வாதாரத்தை ஈட்டுகின்றனர், அதில் ஒரு சிலர் அவரை, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளை பயிர் செய்கின்றனர் ஒரு சில விவசாயிகள் மல்லி பூ சாமந்திப்பூ கனகாம்பரம் உள்ளிட்ட பூ வகைகளை நாடி இருக்கின்றனர் ஒரு சில விவசாயிகள் நெற்பயிரிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.. இந்த நிலையில் சுற்றுவட்டார பகுதியில் இருந்த ஏராளமான விவசாயிகள் சொர்ண வரி என்கிற அரிசியை பயிரிடப்பட்டு அறுவடை செய்து தற்பொழுது கிராமப் பகுதியில் உள்ள நெல் களத்தில் விவசாயிகள் நெல் மணிகளை வைத்துள்ளனர்.. இந்த பகுதிக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என பலமுறை மனு அளித்தும் போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள படவில்லை எனக் கூறப்படுகிறது.. இது சம்பந்தமாக பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் எங்களின் மனு அனைத்தும் குப்பைகளுக்கு சென்றதே தவிர இதுவரை எங்களுக்கு எந்த ஒரு அரசு அதிகாரியும் செவிசாய்க்கவில்லை என கண்ணீர் மல்க விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.. எனவே விவசாயிகளின் நலன் கருதி இந்தப் பகுதியில் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்..