புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு கழிப்பறை வசதி இல்லாமல் இருந்து வந்த நிலையில் காவல்துறை சார்பில் நடமாடும் கழிப்பறை வசதி வாகனத்தை இன்று முதல் காவலர்கள் பயன்பாட்டிற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் இருந்து 500 மீட்டர் தூரம் உள்ளே அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.