புதுகை புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு மகளிர் கலைக் கல்லூரி வரை சாலையின் இரு புறமும் மாநகராட்சியால் கம்பிகள் அமைக்கப்பட்டு நடைபாதை பிளவர் பேக் கல்லால் போடப்பட்டுள்ளது. இவ்வழியே தினந்தோறும் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவிகள் சென்று வருவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த நடைபாதையில் ஏராளமான கடைகள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் மாணவிகள் அவ்வழியே செல்ல மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.