தாராபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் தனியார் நிறுவன டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தாராபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் தனியார் நிறுவன டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தாராபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் தனியார் நிறுவன டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தாராபுரம் டவுன் குளத்து புஞ்சை தெரு பாப்பம்மாள் திருமண மண்டபம் அருகே வசித்து வருபவர் செந்தில்குமார் (வயது 54 ) .இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி(வயது48). தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.இத்தம்பதிகளுக்கு 17 வயதில் ஒரு மகளும் 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சம்பவத்தன்று லட்சுமி பள்ளிக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த செந்தில்குமார் மோட்டார் போட்டு செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார் . அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.இதில் செந்தில்குமார் மயங்கி விழுந்தார். மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய லட்சுமி பார்த்தபோது செந்தில் குமார் செடிகளுக்கிடையே கீழே கிடந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். ஆனால் செந்தில்குமரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இது குறித்து லட்சுமி அளித்த புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . தண்ணீர் பாய்ச்சிய போது மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன டிரைவர் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.