ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் சப்பரத்தில் திருவீதி உலா
ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் சப்பரத்தில் திருவீதி உலா
ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் சப்பரத்தில் திருவீதி உலா தாராபுரத்தில் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. தாராபுரம் கண்ணன் நகரில் உள்ள ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. யாக கால பூஜைகள் மஹாபூர்ணாஹூதி, யாத்ரா தானம் கடம்புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றது .கலசங்களுக்கு தீர்த்தம் செலுத்துதல்.மஹாகும்பாபிஷேக நிகழ்ச்சிகளை சிவசக்தி ஷண்முக சாஸ்திரிகள் நடத்திவைத்தார். தொடர்ந்து திருக்கல்யாணம் மகாதீபாரதனைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. அம்மன் சப்பரத்தில் கண்ணன் நகர் வீதிகளில் வலம் வந்தபோது பக்தர்கள் பயபக்தியுடன் பூஜை செய்து வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி கோவிந்தராஜ் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.