குழந்தை கடத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி
குழந்தை திருமண ஒழிப்பு, குழந்தை கடத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியில் அரசமரம் வீதி அரசு பள்ளி மாணவிகள் பதாகைகள் ஏந்தி சென்றனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, மற்றும் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் இணைந்து. குழந்தை திருமணம், குழந்தை கடத்தல், போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது . இந்த பேரணியை குழந்தைகள் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அமுதா, சிறப்பு சார்பு ஆய்வாளர் மகாலட்சுமி அரசு பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் துவங்கி வைத்தனர். பேரணியானது அரசமர வீதி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் துவங்கி அபிராமி அம்மன் கோவில் தெரு ,பெரிய கடைவீதி, அரச மரத்து வீதி, மேற்கு ரத வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம், குழந்தை கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு, மது ஒழிப்பு, பள்ளி கல்லூரிகளுக்கு வரும் மாணவ மாணவிகள் பேருந்து படியில் தொங்குவதால் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர்.