வரத விநாயகருக்கு தங்க கவசம்: சிறப்பு வழிபாடு!
தூத்துக்குடியில் உள்ள அருள்மிகு வரத விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை வழிபட்டு சென்றனர்
தூத்துக்குடி கதிரேசன் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ அருள்மிகு வரத விநாயகர் ஆலயம் இந்த ஆலயத்தில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு பூர்ணா குதி மற்றும் கணபதி ஹோமம் நடைபெற்றது இதைத்தொடர்ந்து விநாயகருக்கு பால் தயிர் தேன் விபூதி சந்தனம் உள்ளிட்ட பல்வேறு நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் புனித நீர் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து விநாயகருக்கு தங்க கவசம் தங்க அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டு சென்றனர் பக்த்தர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதமாக வழங்கப்பட்டது.