கரூரில் தனியார் வங்கி மேலாளர் மாயம். மனைவி புகார். காவல்துறை விசாரணை.
கரூரில் தனியார் வங்கி மேலாளர் மாயம். மனைவி புகார்.காவல்துறை விசாரணை.
கரூரில் தனியார் வங்கி மேலாளர் மாயம். மனைவி புகார்.காவல்துறை விசாரணை. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, செங்குந்தபுரம், விஜய நகரை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் வினோத் குமார் வயது 35. இவர் கரூரில் செயல்படும் ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல செப்டம்பர் 4-ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். ஆனால், இவர் வங்கிக்கும் செல்லவில்லை. அதே சமயம் பணி முடிந்து வீட்டிற்கும் திரும்ப வில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த வினோத் குமார் மனைவி இந்துஜா வயது 33 என்பவர், வழக்கமாக அவரது கணவர் வினோத்குமார் செல்லும் இடங்களில் தேடி பார்த்தும், அவரது நண்பர்களிடம் விசாரித்து பார்த்தும், உறவினர்கள் வீட்டில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்காத்தால், இது குறித்து கரூர் காவல் நிலையத்தில் தனது கணவனை காணவில்லை என புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மாயமான தனியார் வங்கி மேலாளர் வினோத்குமாரை தேடி வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.