வாங்கல் அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது வேகமாக வந்த ஆட்டோ மோதி விபத்து. மூதாட்டி படுகாயம்.
வாங்கல் அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது வேகமாக வந்த ஆட்டோ மோதி விபத்து. மூதாட்டி படுகாயம்.
வாங்கல் அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது வேகமாக வந்த ஆட்டோ மோதி விபத்து. மூதாட்டி படுகாயம். கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா, வாங்கல் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி பாப்பம்மாள் வயது 76. இவர் செப்டம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணி அளவில், கரூர் - மோகனூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாங்கல் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகே சென்றபோது, எதிர்திசையில், கரூர், சின்னாண்டாங் கோவில், சக்தி நகர் பகுதியை சேர்ந்த வரதராஜன் வயது 35 என்பவர், வேகமாக ஓட்டி வந்த ஆட்டோ பாப்பம்மாள் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த பாப்பம்மாளுக்கு முன் நெற்றி, இடது தோள்பட்டை, இடது கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த பாப்பம்மாளின் பேரன் தினேஷ்குமார் வயது முப்பது என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஆட்டோவை வேகமாகவும் கவனக்குறைவாகும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வரதராஜன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.