பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் சன்மானம்: போஸ்டர்!
தூத்துக்குடியில் செல்ல பிராணி பூனையை காணவில்லை என்ற போஸ்டர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தூத்துக்குடி புதுக்கிராமம் பகுதியில் காணாமல் போன பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று ஒருவர் போஸ்டர் ஓட்டி உள்ளார். அதில் பூனையின் அடையாளங்கள் மற்றும் தனது செல்போன் எண்ணை குறிப்பிட்டுள்ளார். செல்ல பிராணியை காணவில்லை என்று ஒட்டியுள்ள போஸ்டரை பார்த்த பலரும் அதனை படம் எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி பூனையை கண்டுபிடிக்க உதவுமாறு கோரி வருகின்றனர்.