வீ.ஜி விகாஸ் பப்ளிக் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா.
வீ.ஜி விகாஸ் பப்ளிக் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா.
மல்லூர் வீ.ஜி விகாஸ் பப்ளிக் பள்ளியில் வெள்ளிக்கிழமையன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளின் நடனம் மற்றும் நாடகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஒன்பதாம் வகுப்பு பயிலும் அஸ்வின்குமார் , பிரசன்னகுமார் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பள்ளி முதன்மைச் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, நிர்வாக அலுவலர் வினோத்குமார் பள்ளி முதல்வர் கணேஷ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .