சூரிய ஒளி கதிர்களைப் பயன்படுத்தி மரப்பலகையில் விநாயகர் உருவம்

மயிலாடுதுறையில் சூரிய ஒளிக்கதிர்களை பயன்படுத்தி மரப்பலகையில் விநாயகரை உருவப்படத்தை வரைந்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடிய இளைஞர்:-

Update: 2024-09-07 13:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சூரிய ஒளிக்கதிர்களை குவித்து அதிலிருந்து வெளிப்படும் வெப்பத்தின் மூலமாக மரப்பலகை எரித்து உருவாக்கப்படுவது சன் வுட் பர்னிங் ஆர்ட் எனப்படுகிறது. இந்த கலை தற்போது வேகமாக பரவிவரும் நிலையில், ஆசியாவிலேயே இந்த கலையை முதன்முதலாக கற்று, திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், சுவாமி படங்கள் ஆகியவற்றை உருவாக்கியவர் மயிலாடுதுறையை சேர்ந்த விக்னேஷ் என்பவர். இந்நிலையில், உலகமெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், இவர் விநாயகர் உருவப்படத்தை சன் வுட் பர்னிங் ஆர்ட் முறையில் வரைந்து கொண்டாடுகிறார். பொதுவாக ஒரு உருவத்தை வரைய 4 நாள்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், தற்போது, போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால் 15 நாட்கள் எடுத்துக்கொண்டு இந்த ஓவியத்தை வரைந்துள்ளதாக கூறினார் இந்த ஓவியர் விக்னேஷ்.

Similar News