கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கைது
கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கைது
கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கைது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு மடத்துக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெற்று வருவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து தாராபுரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் மதுவிலக்கு போலீசார் மடத்துக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்கம் பழனி புதூர் பஸ் நிறுத்தம் அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் தனது பையில் கஞ்சா சாக்லேட் வைத்திருந்தது தெரியவந்தது. இதை அடுத்து அந்த நபரை தாராபுரம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பித்யோதர் பால் என்பவரது மகன் பசு தேவ பால் வயது 35 என்பதும் தெரியவந்தது. இவர் தற்போது நல்லூர் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் மாஸ்டராக வேலை செய்து வருவது தெரியவந்தது. இவர் அவ்வப்போது தனது சொந்த ஊரான ஒடிசா மாநிலத்திற்கு சென்று விட்டு மீண்டும் திருப்பூருக்கு வரும்போது சட்டவிரோதமாக கஞ்சா சாக்லேட் கொண்டு வந்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இந்நிலையில் அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 3.2 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து சிறையில் அடைத்தனர்.