பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் தாராபுரம் பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு
பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் தாராபுரம் பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு
பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் தாராபுரம் பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இன்று காலை இந்து முன்னணி சார்பில் 70 விநாயகர் சிலைகளும், இந்து மக்கள் கட்சியின் சார்பில் 15 விநாயகர் சிலைகளும், தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் சார்பில் 15 விநாயகர் சிலைகளும் வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து இன்று காலை 5 மணி முதல் கணபதி ஹோம பூஜை உடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு விநாயகர் சிலைகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு செய்து வழிபாடு நடைபெற்றது. இதை தொடர்ந்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு நாளை இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஊர்வலம் நடைபெறும் இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது. தாராபுரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஜவகர் நகர் பகுதியில் சுமார் 11 அடி உயரமுள்ள விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெற்றது.