இந்து முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதலாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசரஜன ஊர்வலம்
இந்து முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதலாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசரஜன ஊர்வலம்
இந்து முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதலாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசரஜன ஊர்வலம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர மற்றும் ஒன்றிய பகுதியில் இந்து முன்னேற்றக் கழகத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக நடைபெற்றது. இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட இந்து முன்னேற்ற கழக அலுவலகத்தில் 5 அடி உயரம் உள்ள விநாயகர் சிலையை வைத்து இன்று காலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினர். இதைத் தொடர்ந்து ஒன்றிய பகுதியில் தளவாய் பட்டினம் பகுதியில் இரண்டு விநாயகர் சிலைகளை வைத்து இன்று பிரதிஷ்டை செய்து இந்து முன்னேற்றக் கழக நிர்வாகிகள் வழிபாடு நடத்தினர். இன்று காலை இந்து முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மூன்று சிலைகளை இன்று காலை பிரதிஷ்டை செய்து கணபதி ஹோம பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்திய நடத்தினர்.திருப்பூர் தெற்கு மாவட்ட இந்து முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் என். கோமதி தலைமையிலும் இந்து முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் கோபிநாத் முதலாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு உடுமலை ரவுண்டான அருகே கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலத்தை தொடர்ந்து இன்று மாலை 4 மணி அளவில் உடுமலை ரவுண்டானா அருகே மூன்று சிலைகளையும் வைத்து பூஜை செய்யப்பட்ட பின்னர் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்து அமராவதி ஆற்றில் கரைத்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் இந்து முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ஜி.கார்த்திக் ஏற்பாட்டில் நடைபெற்றது. மேலும் நிகழ்சிகள் மாவட்ட இந்து முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.