குண்டடம் நான்கு வழிச்சாலையில் மின்கம்பங்கள் மாற்றி அமைப்பு

குண்டடம் நான்கு வழிச்சாலையில் மின்கம்பங்கள் மாற்றி அமைப்பு

Update: 2024-09-08 03:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குண்டடம் நான்கு வழிச்சாலையில் மின்கம்பங்கள் மாற்றி அமைப்பு குண்டடம்- தாராபுரம் நான்கு வழிச்சாலை மின்கம்பங்கள்,டிரான்ஸ்பார்மர்கள்  மாற்றி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இருவழித்தடத்தில் இருந்து நான்கு வழிததடமாக அமைக்கப்படுகிறது. குண்டடம் முதல் தாராபுரம் சாலை சந்திப்பு வரையிலான 5,00 கி.மீ நீளமுள்ள சாலை பகுதியினையும் அகலப்படுத்தித்தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். தமிழக முதலைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இச்சாலையை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தும் பணிகள் ரூ.39கோடியே80லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், தற்பொழுது சாலையினை அகலப்படுத்தும் பணிக்கு இடையூறாக இருந்த மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகள் மாற்றி அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மின்வாரியத்தினர்இணைந்து  மேற்கொண்டுவருகின்றனர்.

Similar News