மாப்படுகை பாதாள காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே சுமங்கலி மற்றும் பாதாள காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் , 18 அடி உயர பிரம்மாண்ட பாதாள காளியம்மன் மூலவருக்கு நடைபெற்ற கும்பாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு மேற்கொண்டனர்

Update: 2024-09-08 03:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை கிராமத்தில் சுமங்கலி காளியம்மன் மற்றும் பாதாள காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கடந்த ஐந்தாம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து நான்கு காலயாக சாலை பூஜைகள் இன்று காலை நிறைவுற்று, மேள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடாகி கோபுரத்தை வந்தடைந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமசையாக நடைபெற்றது.  தொடர்ந்து 18 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட பாதாள காளியம்மனுக்கு மூலவர் கும்பாபிஷேகம் நடைபெற்று, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  தரிசனம் செய்தனர்.

Similar News