உடுமலையில் சங்கு ஊதும் போராட்டம் அறிவிப்பு
வழித்தடம் பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் உடுமலை கூடுதல் புதிய பேருந்து நிலையம் யசோதா ராமலிங்கம் செல்லும் பாதையில் குறுக்கே சுவர் கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் பல ஆண்டு காலமாக மக்கள் பயன்படுத்தி வரும் வழித்தடத்தை திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 11ம் தேதி மத்திய பஸ் நிலையம் அருகில் நியாயம் கேட்டு சங்கு ஊதும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது