ஆத்தூரில் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் ஆலயம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆத்தூரில் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் ஆலயம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆத்தூரில் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் ஆலயம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், ஆத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் ஆலயம் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காவேரி ஆற்றங்கரையில் இருந்து ஊர் பொதுமக்கள் பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து பரிகார தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், கோபுர கலசம் வைத்து, கண் திறப்பு செய்தல் போன்ற நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு,மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. இன்று அதிகாலையில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாகம் வேள்வியில் பூஜை நடைபெற்றது. பூஜையில் பூஜிக்கப்பட்ட புனித நீரை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் ஆலயத்தின் கோபுரத்திற்கு எடுத்துச் சென்று சிவாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேகம் விழாவை சிறப்பாக சிவாச்சாரியார்கள் நடத்தினர். இந்த விழாவில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, பாம்புகளின் திமுக மேற்கொண்டிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், ஊர் கமிட்டி தலைவர்கள், கோயில் கமிட்டி நிர்வாகிகள், பக்தர்கள் பொதுமக்கள் என சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர்.