கரூரில் "தமிழக வெற்றி கழகம்" கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
கரூரில் "தமிழக வெற்றி கழகம்" கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
கரூரில் "தமிழக வெற்றி கழகம்" கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் கடந்த 2009 ஆம் ஆண்டில் "விஜய் மக்கள் இயக்கம்" என்ற பெயரில் ஒரு அமைப்பை துவக்கி தமது திரை ரசிகர்களை அந்த அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை தமிழகம் முழுவதும் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தமது அமைப்பை "தமிழக வெற்றி கழகம்" என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியாக அறிவித்து,தேர்தல் ஆணையத்தில் கட்சியின் அங்கீகாரத்துக்காக பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை பதிவு செய்து தேர்தலில் போட்டியிடுவதற்கான அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிக்கையாக கட்சியின் தலைவர் விஜய் இன்று கட்சி நிர்வாகிகளுக்கு அனுப்பி வைத்தார். விஜய் அறிக்கை வெளியிட்ட அடுத்த நிமிடம், கரூர் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மகளிர் அணியினர் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டான அருகில் ஒன்று கூடி பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே பரபரப்பு நிலவியது.