சுற்றுலா வாகனம் பிரேக் செயலிழந்ததால் விபத்து

கொடைக்கானல் சுற்றுலா தளமான பைன் ஃபாரஸ்ட் பகுதியில் 3வது முறையாக சுற்றுலா வாகனம் பிரேக் செயலிழந்ததால் 12க்கும் மேற்பட்ட வாகனங்கள் மேலே மோதியதால் விபத்து

Update: 2024-09-08 08:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது வழக்கம். இந்நிலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலமான பைன் மர காடுகள் பகுதியில் தூத்துக்குடியைச் சேர்ந்த சுற்றுலா வாகனம் இரக்கத்தில் அணிவகுத்து இறங்கும் பொழுது வாகனத்தில் பிரேக் செயலிழந்த காரணத்தினால் ஓட்டுநர் வீராசாமி கட்டுப்பாட்டை இழந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. இதனால் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு இந்த வாகனங்கள் மீது மோதி தொடர்ந்து 12 வாகனங்கள் மற்றும் இரண்டு இரு சக்கரங்கள் மேல் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் ஓட்டுனர் வீராசாமி மற்றும் சுற்றுலாப் பயணி முத்துலட்சுமி லோகேஷ் ஆஃபரித் நான்கு பேருக்கு காயங்களுடன் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News