விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து எழுச்சி முன்னணியினர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைத்தனர்

இந்த எழுச்சி முன்னணி

Update: 2024-09-08 12:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு தேனியில் இந்து அமைப்பினர் சார்பில் 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று பெரியாற்றில் கரைத்தனர் பெண்கள் முளைப்பாரி மற்றும் சிறு விநாயகரை தலையில் வைத்துக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் ஊர்வலமாக சென்றனர் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து ஆற்றில் கரைப்பதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர் இந்நிலையில் தேனியில் இரண்டாம் நாளான இன்று இந்து எழுச்சி முன்னணி மற்றும் இந்து முன்னணி சார்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்து கொண்டும் சிறிய அளவிலான விநாயகரை தலையில் வைத்துக் கொண்டும் தேவராட்டம், செண்டை மேளம் முழங்க ஊர்வலம் தொடங்கியது தேனி பொம்மையைகவுண்டன்பட்டியலில் தொடங்கிய விநாயகர் ஊர்வலம் அல்லிநகரம், பழைய பேருந்து நிலையம், பங்களாமேடு வழியாக அரண்மனைபுதூர் வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர் பின்னர் அரண்மனைபுதூர் பெரியாற்றில் விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கப்பட்டது தேனி நகரில் சென்ற விநாயகர் ஊர்வலத்தை வழி நடுவிலும் ஏராளமான பொதுமக்கள் பார்த்து சென்றனர் தேனி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

Similar News