வடக்கு பாளையத்தில் டூவீலரை களவாடியவர் கையும் களவுமாக கைது.
வடக்கு பாளையத்தில் டூவீலரை களவாடியவர் கையும் களவுமாக கைது.
வடக்கு பாளையத்தில் டூவீலரை களவாடியவர் கையும் களவுமாக கைது. கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, வடக்கு பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது 54. இவர் அப்பகுதியில் விவசாயியாக பணியாற்றி வருகிறார். செப்டம்பர் 6-ம் தேதி அன்று இரவு இவரது வீட்டிற்கு முன்பாக அவரது டூவீலரை நிறுத்திவிட்டு உறங்கச் சென்று விட்டார். மறுநாள் செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில், நிறுத்தி இருந்த டூவீலரை வாலிபர் ஒருவர் களவாடிச் சென்றுள்ளார். இதனை கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அந்த வாலிபரை கையும் களவுமாக விரட்டி பிடித்தனர். பிடிப்பட்ட வாலிபரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து, பிறகு பசுபதிபாளையம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் வாலிபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, பிடிபட்டவர் பெயர் யுகேந்திரன் வயது 20 எனவும், திருச்சி, மலைக்கோட்டை, கீழ ஆண்டாள் தெரு அருகே உள்ள கறிக்கடை சந்து பகுதியைச் சேர்ந்தவர் எனவும், தற்போது இவர் கரூர் தாந்தோணிமலை அருகே உள்ள கொளந்தகவுண்டனூர் பகுதியில் கூலி வேலை செய்து வருவதாகவும் தெரியவந்தது. மேலும், யுகேந்திரன் மீது திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் ஏற்கனவே இரண்டு வழக்குகள் உள்ளது என்பதும் தெரிய வந்தது. எனவே யுகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.