ஆலங்குடி அருகே உள்ள வம்பன்நால் சாலையில் வீரமணி என்பவர் சாலையில் இன்று நடந்து சென்று கொண்டிருந்தார். இதில் கவனக்குறைவாக இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்த அலெக்ஸ் பாண்டியன் அவர் மீது மோதியதில் வீரமணியின் காலில் காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.