வெள்ளியணை ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நடந்து சென்ற பெண் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து. பெண் படுகாயம்.
வெள்ளியணை ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நடந்து சென்ற பெண் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து. பெண் படுகாயம்.
வெள்ளியணை ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நடந்து சென்ற பெண் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து. பெண் படுகாயம். கரூர் மாவட்டம், வெள்ளியணை சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி பத்மா வயது 54. இவர் வெள்ளியணை அருகே செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 7 மணி அளவில் அவர் பணியாற்றும் மருத்துவமனை முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வீரமலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் வயது 42 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற பத்மா மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த பத்மாவுக்கு பின்னந்தலை மற்றும் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவ தொடர்பாக பத்மா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும் ,அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.