விருத்தாசலம் அருகே அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
திரளான பக்தர்கள் தரிசனம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோ. ஆதனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ செல்லியம்மன், மாரியம்மன், நவகிரகம், நாகாத்தம்மன், ஆதிச்தீஸ்வரர், வெங்கடாஜலபதி, கருடன், கம்பத்தாழ்வார், ஆஞ்சநேயர், ஐயப்பன், திரௌபதி, நந்தி, ஆதிபராசக்தி, கருப்புசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. முன்னதாக கடந்த ஏழாம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை முதல் கால யாக பூஜையும், இன்று 8ந் தேதி காலை 6 மணிக்கு மேல் இரண்டாம் கால யாக பூஜை மற்றும் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று சரியாக 8. 15 மணிக்கு சிவாச்சாரியார்கள் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்ற மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் புனித நீரூற்றி மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. அப்போது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.