விராலிமலை:விராலிமலை ஒன்றியம் பூமாதா நகரைச் சேர்ந்தவர் சேசுராஜ் (66). இவர் மனைவி சந்திரா. நேற்று முன்தினம் சேசுராஜ், சந்திரா ஆகி யோர் வீட்டில் இருந்து தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்றுவிட்டனர்.வேலை முடித்து வீட்டிற்கு வந்த போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அவர்கள்உள்ளே சென்று பார்த்த போது பீரோவின் கதவும் உடைக் கப்பட்டு10 பவுன் தங்க நகை, 250 கிராம் வெள்ளி நகைகள் கொள்ளை போனது தெரிந்தது. இது குறித்து சேசுராஜ் விராலிமலை போலீசில் புகார் அளித்தார். அதை விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த அடைக்கலராஜ் (25) என தெரிந்தது. அவரை கைது செய்தனர்.