புதுக்கோட்டை ரயில் நிலையத்தின் நடைமேடைகளில் இருக்கும் குடிநீர் குழாய்கள் பராமரிப்பு இல்லாமலும் தண்ணீர் வராமலும் இருக்கின்றன. ரயில்கள் வந்து போகும் தருணங்களில் குடிநீர் இல்லாததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேம்பாட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில் சரியாக குடிநீர் வழங்க வழிவகை செய்யவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.