கறம்பக்குடி-திருமணஞ்சேரி பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த அஜய் (19) மீது, அதே வழியில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மோதியதில் இடது காலில் காயம் ஏற்பட்டு புதுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ராஜேந்திரன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மணிகண்டன் (18) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.