பல்நோக்கு மையக் கட்டிடம் கட்ட பூமி பூஜை. எம்எல்ஏ சிவகாமசுந்தரி பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்
பல்நோக்கு மையக் கட்டிடம் கட்ட பூமி பூஜை. எம்எல்ஏ சிவகாமசுந்தரி பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்
பல்நோக்கு மையக் கட்டிடம் கட்ட பூமி பூஜை. எம்எல்ஏ சிவகாமசுந்தரி பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட ரங்கநாதபுரம் ஊராட்சியில் உள்ள ரெங்கநாதபுரம் பகுதியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு மைய கட்டிடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரிக்கு பொன்னாடை அணிவித்து ஊர் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பூமி பூஜை விழாவில் பங்கேற்று அதற்கான பணிகளை துவக்கி வைத்தார் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுமத்தராதேவி, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா, ஒப்பந்ததாரர் துரைசாமி, உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு பூமி பூஜை விழாவை சிறப்பித்தனர்.