கல்லூரி மாணவி கர்ப்பம் காதலன் மீது கோக்சோ வழக்கு

திங்கள்நகரில்

Update: 2024-09-09 06:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டம் திங்கள் நகர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம்  முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவியை கடந்த சில நாட்களாக உடலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. உடனடியாக தாயார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு பரிசோதனை செய்த போது மாணவி மூன்று மாதம் கர்ப்பமாக இருந்த தெரிய வந்தது.        உடனே மாணவியிடம் நடத்திய விசாரணையில்  பக்கத்து கிராமத்தை சேர்ந்த 20 வயது வாலிபரை கடந்த ஒன்றரை வருடமாக காதலித்து வருவதாகவும்,  இதை யடுத்து வாலிபர் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி மாணவியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் சென்று திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்ததாக மனைவி தெரிவித்தார்.        இது குறித்து மாணவியின் தாயார் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அந்த 20 வயது வாலிபர் மீது போக்சோ உள்ளிட்ட  பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தற்போது மாணவி சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம்  அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வாலிபர்  வெளியூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு 21 வயதும் மாணவிக்கு  18 வயதும்  நிறைவடைந்த உடன் இரு வீட்டார்கள் இணைந்து திருமணத்தை நடத்தி வைப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Similar News