நாளை நாமக்கல்லில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம்!
இந்த கருத்தரங்கில் திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவா் திருச்சி சிவா, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி, வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், திமுக செய்தி தொடா்பாளா் டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியா் கு.ஞானசம்பந்தன் ஆகியோா் பங்கேற்று பேசுகின்றனா்
நாமக்கல்லில்,கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் வரும் நாளை (செப்டம்பர் -10) செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான K.R.N. இராஜேஸ்குமாா் MP., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.. நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் வரும் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள நளா ஹோட்டலில் நடைபெற உள்ளது. மாவட்டச் செயலாளா் தலைமையில் நடைபெறும் இந்த கருத்தரங்கில், திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவா் திருச்சி சிவா, உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சா் அர.சக்கரபாணி, வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், திமுக செய்தி தொடா்பாளா் டி.கே. எஸ்.இளங்கோவன், பேராசிரியா் கு.ஞானசம்பந்தன் ஆகியோா் பங்கேற்று பேசுகின்றனா். மேலும், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் எம்எல்ஏ, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கே.பொன்னுசாமி எம்எல்ஏ உள்ளிட்டோா் முன்னிலை வகிக்கின்றனா். இக் கருத்தரங்கில், அனைத்து மாநில, மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், நிா்வாகிகள், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கருத்தரங்கம் தொடங்கும் முன்பு காலை 9.30 மணிக்கு தென்றல் நடனக் குழு வழங்கும் ‘கலைஞரின் குறளோவியம்’ என்ற நாட்டிய நாடகம் நடைபெறும் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.