மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமையல் செய்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
காத்திருப்பு போராட்டம்
குறவர் பழங்குடியின மக்களுக்கு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு சார்பில் கட்டப்பட்ட வீடுகளை தங்களுக்கு ஒதுக்க வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமையல் செய்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டியில் உள்ள அம்மாபட்டியில் நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் சார்பில், 110 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அக்குடியிருப்பு வீடுகளில் தங்களுக்கான வீடுகளை ஒதுக்க வேண்டும் எனக் குறவர் பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 2017 ஆம் ஆண்டு கோரிக்கை வைத்திருந்தனர். இதன் பலனாக குறவர் பழங்குடியின மக்களுக்கு 110 குடியிருப்புகள் ஒதுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்த நிலையில் தற்போது வரை வீடுகள் ஒதுக்கப்படாததால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர் இந்த நிலையில் தற்போது குறவர் பழங்குடியினர் சமுதாய இல்லாத மக்களுக்கு வீடுகளை ஒதுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டை கூறி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் அடுப்புகளை வைத்து பெண்கள் உணவு சமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் வன வேங்கை கட்சி மற்றும் குறவர் பழங்குடியின மக்கள் சார்பில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பொதுமக்கள் என கலந்துகொண்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது