மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 93 கோடி மதிப்பிட்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 93 கோடி மதிப்பிட்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்பு செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே உள்ள தனியார் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்,காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம்,செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 937 சுய உதவி குழுக்களில் உள்ள சுய உதவிக் குழு 11018 .உறுப்பினர்களுக்கு ரூபாய் 92.94 கோடி வங்கி கடன் இணைப்பு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.