ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலய மண்டலாபிஷேகம்
ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலய மண்டலாபிஷேகம்
அருள்மிகு ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலய மண்டலாபிஷேகம் மற்றும் ஏகாதசருத்ர மஹாயாகம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் வட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த மதுரா வெங்கடேசபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது. வெங்கடேசபுரம் அருள்மிகு ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம் பூஜை. நவகலச பூஜை யாகம், ஏகாதசருத்ர மஹாயாகம், செய்து சிறப்பு மஹா அபிஷேகம், கலசாபிஷேகம் சஹஸ்ரநாம அர்ச்சணை பூஜைகள், செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஐயனாரப்பன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்று ஐயனாரப்பன் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.