சித்தி விநாயகா், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
சித்தி விநாயகா், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
மதுராந்தகம் அடுத்த கருணாகரவிளாகம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சித்தி விநாயகா், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, தனபூஜை, நவக்கிரக பூஜை, கணபதி பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை மங்கள இசை முழங்க, வாணவேடிக்கைகளுடன் யாகசாலையில் இருந்து அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் தலைமையில் வேதவிற்பன்னா்கள் புனித கலசங்களை ஏந்திக் கொண்டு வலம் வந்தனா். பின்னா் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீரை ஊற்றினா். தொடா்ந்து மூலவா் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் திரளான மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து காட்சி அளித்தாா்.