புதுகை மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 60 சதவீத மதிப்பெண்க ளுக்கு மேல் எடுத்து தேர்ச்சிப்பெற்ற முன்னாள் படைவீரர்களின் மகன் மற்றும் மகள்களுக்கு 2024 25ம் கல்வியாண்டில் தொழிற்கல்விக்கான பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங் கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகிறது. இந்த திட்டம் 202425ம் கல்வியாண்டில் பயிலும் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே பொருந்தும். ஒராண்டுக்கு கல்வி உதவித்தொகையாக மாணவர்களுக்கு ரூ.30 ஆயிரம், மாணவிகளுக்கு ரூ.36ஆயிரம் வழங்கப்படும். இவை முன்னாள் படைவீரர்களின் முதல் 2 சிறார்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் விபரங்களுக்கு www.ksb.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அடிப்படையில் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள் நவம்பர் 30ம் தேதியாகும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை கலெக்டர் அருணா தெரிவித் துள்ளார்.