கோமுகி அணையில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று கரைக்கப்பட்டது.கச்சிராயபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 95 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த 3 தினங்களாக விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. கச்சிராயபாளையம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட சிலைகள் அனைத்தும் வாகனங்களில் ஊர்வலமாக கோமுகி நதிக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைக்குப்பின் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிரேன் உதவியுடன் கரைக்கப்பட்டது.டி.எஸ்.பி., தேவராஜ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.